பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
மாணவர்களை தரக்குறைவாக பேசிய தாளாளர்.. தக்க நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி
சென்னை குரோம்பேட்டையில் உள்ளது ஸ்ரீமதி சுந்தரவல்லி மெட்ரிகுலேஷன் (எஸ்எஸ்எம்) பள்ளி தாளாளர் மாணவர்களிடம் தலா ரூ. 2 லட்சம் டெபாசிட் தொகை கேட்டதாக வந்த புகாரையடுத்து தாளாளர் சந்தானத்தை பீர்க்கங்கரணை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை குரோம்பேட்டை மற்றும் ஆலம்பாக்கத்தில் உள்ள எஸ்.எஸ்.எம். சிபிஎஸ்இ பள்ளி தாளாளர் சந்தானம் மாணவர்களிடம் 2 லட்சம் கேட்டு நிர்பந்தித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், தரக்குறைவாக பேசியதால், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சந்தானத்தை துணை ஆணையர் முத்துசாமி, சேலையூர் உதவி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர். அதன்பிறகு சந்தானத்தை பீர்க்கங்கரணை போலீஸார் கைது செய்தனர்.
இதையடுத்து பள்ளிக்கு காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
மேலும் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பள்ளி தாளாளர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.