மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தீபாவளிக்காக களத்தில் இறங்கும் சென்னை மெட்ரோ இரயில்! அதிரடி கிளப்பும் தமிழக அரசு!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏற்படும் கூட்ட நெரிசலை தடுக்கவும், போக்குவரத்துக்கு தட்டுப்பாடுகளை தவிர்க்கவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
இந்நிலையில், வருகிற தீபாவளி பண்டிகைக்காக 20,567 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. சென்னையில் இருந்து வெளியூர் செல்ல எதுவாக நவம்பர் 3,4,5 ஆகிய தேதிகளில் சுமார் 11,367 பேருந்துகள் இயக்கப்படுகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட நெரிசலை தடுக்க சென்னையில் கோயம்பேடு, தாம்பரம், மாதவரம், பூந்தமல்லி ஆகிய 4 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது.
மெட்ரோ ரயில் வசதி :
மேலும் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக வரும் நவம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பொதுவாக மெட்ரோ ரயில் சேவை இரவு 10 மணி வரை இயக்கப்படுவது தான் வழக்கம். ஆனால், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, எழும்பூர், சென்னை சென்டரல், கோயம்பேடு ஆகிய பகுதிகளுக்கு பொது மக்களின் வசதிக்காக, இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் சேவையை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.