மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குடும்ப பிரச்சினையால் மாணவி தற்கொலை முயற்சி: விக்கிரவாண்டி சம்பவம் குறித்து பரபரப்பு தகவல்..!
விழுப்புரம் கே.கே.ரோடு, மணி நகரை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகள் ரம்யா (18). இவர் விக்கிரவாண்டியில் உள்ள தனியாருக்கு சொந்தமான பார்மசி கல்லூரியில் பி.பார்ம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். தினமும் வீட்டில் இருந்து கல்லூரிக்கு கல்லூரி பேருந்து மூலம் சென்று வருகிறார்.
இந்த நிலையில், நேற்று காலை கல்லூரிக்கு வழக்கம்போல் சென்றுள்ளார். அங்கே சென்ற அவர் முதல் மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கல்லூரியில் இருந்த பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அவருக்கு இடுப்பு மற்றும் கால்களில் முறிவு ஏற்பட்டுள்ளதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தால் ஏற்பட்ட கலவரத்தின் எதிரொலியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் துணை கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, இணை கண்காணிப்பாளர் பார்த்திபன் மற்றும் காவல்துறையினர் மருத்துவமனை வளாகம் மற்றும் கல்லூரி வளாகத்தின் எதிரேயும் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
மேலும் மாணவியின் தாயார் தேவி கொடுத்த வாக்குமூலத்தின் படி விக்கிரவாண்டி காவல்துறையினர் தற்கொலைக்கு முயற்சி பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் மாணவியிடமிருந்து தற்கொலை கடிதம் ஒன்றும் கைப்பற்றப்பட்டது. அதில் தனது குடும்பப் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொள்ளப் போவதாக எழுதியிருந்ததாக காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் விக்கிரவாண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.