மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடப்பாவிகளா...பச்ச மண்ணுடா... 9 வயது சிறுமிக்கு பள்ளி மைதானத்தில் நிகழ்ந்த சோகம்...கதறும் குடும்பதினர்.!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மலைப்பகுதியில் உள்ள பாச்சலூரை சேர்ந்தவர் சத்யராஜ். கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வரும் இவருக்கு பிரியதர்ஷினி, பிரித்திகா என்ற இரண்டு மகள்களும், நவீன்குமார் என்ற மகனும் உள்ளனர். மூன்று பேரும் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில் படுத்து வந்துள்ளனர்.
இந்நிலையில் சத்யராஜின் மூன்று குழந்தைகளும் வழக்கம் போல் நேற்று பள்ளிக்கு சென்றுள்ளனர். அதில் சத்யராஜின் இரண்டாவது மகள் பிரித்திகா பள்ளி வேலையில் வகுப்பறையை விட்டு 11 மணியளவில் வெளியில் சென்றுள்ளார். சிறுமி வெளியே சென்று வெகு நேரமாகியும் வகுப்பறைக்கு வராததை அடுத்து அவரை தேடியுள்ளனர்.
அப்போது சிறுமி பிரித்திகா பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் தீயில் கருகிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சிறுமியின் குடும்பத்தினருக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுளாளது.