மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தேர்வுக்கு படிக்காததால் கண்டித்த தாய்... மாணவி எடுத்த விபரீத முடிவு... தாய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!
தேர்வுக்கு படிக்காத மகளை தாய் கண்டித்ததால், அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட பரிதாபம் நிகழ்ந்துள்ளது.
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் வ.உ.சி நகர் செல்லியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் ரதி. இவர் 9 ஆண்டுகளுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.
இந்தநிலையில் டிபன் கடை நடத்தி வரும் இவருக்கு, எமிமால் கிரேசி என்ற மகளும், எபிநேசர் என்ற மகனும் உள்ளனர். இவர்களில் எமிமால் கிரேசி ராயபுரத்தில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.
தற்போது 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வரும் நிலையில், எமிமால் கிரேசி சரியாக படிக்காமல் இருந்து வந்துள்ளார். இதனை கண்டு கோபமுற்ற தாய் அவரை கண்டித்ததால் மனமுடைந்த மாணவி, நேற்று காலை தாய் வேலைக்கு சென்ற நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.வேலை முடிந்து வந்தபின், தனது மகள் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த ரதி கதறி அழுதுள்ளார். இதனால் அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து பார்த்தபோது மாணவி தற்கொலை செய்ததை கண்டு, காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மாணவியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.