#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பேராசிரியையை நிர்வாணப்படுத்தி மாணவன் செய்த மோசமான காரியம்.! கைது செய்து சிறையில் அடைத்த போலீசார்!!
சென்னை அம்பத்தூர் பகுதியில் வசித்து வருபவர் விவேஷ். இவர் காஞ்சிபுரம் மாவட்டம் தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் இன்ஜினியரிங் படித்து வருகிறார். மேலும் தனியார் நிறுவனமொன்றில் பகுதி நேரமாகவும் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் விவேஷ் படித்து வந்த பல்கலைக்கழகத்தில் 25 வயது நிறைந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் உதவி பேராசிரியையாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் விவேஷும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் பேராசிரியை அவருடன் நட்பாக பழகி வந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் தனது படிப்பு முடிந்து விட்டதாகவும், அதற்கு பார்ட்டி தருவதாகவும் கூறி பேராசிரியையை விவேஷ் வெளியே வரவழைத்துள்ளார்.
பின்னர் அவரை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு கிழக்கு கடற்கரை சாலையில் சென்ற அவர் பூஞ்சேரி அருகே இருந்த சவுக்கு காட்டிற்குள் வாகனத்தை நிறுத்தியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பேராசிரியர் இங்கே ஏன் வந்தோம் என கேட்டுள்ளார்.அதற்கு அவர் உள்ளேதான் விடுதி உள்ளது. அங்குதான் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளேன் என விவேஷ் கூறியுள்ளார்.
பின்னர் கத்தி ஒன்றை காட்டி பேராசிரியை மிரட்டி அவளது ஆடைகளை அகற்றும்படி மிரட்டியுள்ளார். பேராசிரியை எவ்வளவோ கெஞ்சியும் கேட்காத விவேஷ் அவரை நிர்வாணமாக வீடியோ எடுத்துள்ளார். அதனை தொடர்ந்து மீண்டும் தனது வாகனத்தில் ஏற்றி, பேராசிரியையின் விடுதியில் விட்டுச்சென்ற விவேஷ் இதுகுறித்து வெளியே கூறினால் வீடியோவை இணையதளத்தில் விட்டு விடுவேன் என பேராசிரியையை மிரட்டியுள்ளார். பின்னர் மறுநாள் பேராசிரியைக்கு போன் செய்து உல்லாசமாக இருக்க அழைத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பேராசிரியை இதுகுறித்து செம்மஞ்சேரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அதனை தொடர்ந்து போலீசார் விவேஷை கைது செய்து அவரது செல்போனை பறிமுதல் செய்து அதில் இருந்த வீடியோவை அழித்தனர். இதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.