சென்னையில் திடீரென உள்வாங்கிய கடல்.! அதிகளவில் தென்பட்ட மணற்பரப்பு.! பீதியடைந்த பொதுமக்கள்.!



Suddenly the sea receded in chennai

சென்னை மெரினா, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவில் திடீரென்று கடல் உள்வாங்கியதால் மக்கள் பீதிக்கு உள்ளாகினர்.

சென்னையில் நேற்று நள்ளிரவில் மெரினா, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில்  திடீரென 10 முதல் 15 மீட்டருக்கு கடல் உள்வாங்கியது. சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக கடல் உள்வாங்கியது. இதனால் மணற்பரப்பு அதிகளவில் தென்பட்டது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கடும் பீதியடைந்துள்ளனர்.

அதன்பிறகு சுமார் அரை மணிநேரத்திற்கு பிறகு கடல் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியது. இதனையடுத்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்னர் இந்தோனேஷியாவில் 7.6 ரிக்டர் அளவு நிலநடுக்கம் பதிவானதால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

இதனால், இந்தியாவில் எந்த ஒரு பாதிப்பும் இல்லை என இந்திய சுனாமி மையம் தகவல் தெரிவித்திருந்த நிலையில் கடல் திடீரென உள்வாங்கிய சம்பவம் சென்னை மக்களிடையே சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.