சுஜித் இறந்தது எப்போது? உடல் மீட்கப்பட்டது எப்படி? நெஞ்சை உறையவைக்கும் முக்கிய தகவல்கள்.



Suith body decomposed

திருச்சி மாவட்டம், மனப்பாறையை அடுத்துள்ள நடுகாட்டுப்பட்டியை சேர்ந்த அந்தோணி தாஸ் - கலாமேரி இவர்களின் இரண்டு வயது குழந்தை சுஜித் கடந்த வெள்ளிக்கிழமை மாலை வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருக்கையில் அருகில் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான்.

இதனை அடுத்து குழந்தையை மீட்க கடந்த 80 மணி நேரத்திற்கு மேலாக போராடியும் குழந்தையை உயிருடன் மீட்க முடியவில்லை. குழந்தையை மீட்க முயற்சித்த அணைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தது. இதனை அடுத்து குழந்தை இறந்தது குறித்து அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் வருவாய் துறை ஆணையர் ராதாகிருஷ்ணன்.

RIP Sujith

இதுபற்றி அவர் கூறுகையில்: நேற்று இரவே ஆழ்துளை கிணற்றில் இருந்து துர்நாற்றம் வந்ததாகவும், இதனால் குழிதோண்டும் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டு தேசிய பேரிடர் மீட்பு குழுவின் ஆலோசனைப்படி இடுக்கி போன்ற ஒரு கருவியால் இன்று அதிகாலை குழந்தையின் உடல் ஆழ்துளை கிணற்றில் இருந்து வெளியே எடுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும், பிரேத பரிசோதனை முடிந்த பிறகே குழந்தை இறந்த சரியான நேரம் குறித்து தெரியவரும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் குழந்தையின் உடல் மணப்பாறை அருகே உள்ள பாதிமாபுதூர் கல்லறை தோட்டத்தில் இன்னும் சில நிமிடங்களில் அடக்கம் செய்யப்பட உள்ளது.