#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சுஜித் இறப்பு குறித்து வெளியான பிரேத பரிசோதனை முடிவுகள்! சோகத்தில் சுஜித் பெற்றோர்!
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த குழந்தை சுஜித் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5.45 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருக்கையில் அருகில் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான்.
கடந்த ஐந்து நாட்களாக நடைப்பெற்ற மீட்பு பணியானது கடைசியாக தோல்வியில் முடிவடைந்தது. மேலும் இன்று அதிகாலை 4.30 மணியளவில் குழந்தையின் உடல் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் தற்போது பிரேத பரிசோதனை முடிவுகள் சுஜித்தின் பெற்றோரிடம் அளிக்கப்பட்டது. அதில் குழந்தை கை கட்டப்பட்டிருந்ததால் உடைந்து காணப்பட்டதாக கூறியுள்ளனர். மேலும் உடலின் சில பாகங்கள் இல்லை எனவும் கூறியுள்ளனர். ஆனால் குழந்தை எப்போது இறந்தது என்ற விவரத்தை மருத்துவர்கள் தெரிவிக்கவில்லை.