மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தம்பியின் உடலை ஏக்கத்துடன் பார்த்து நிற்கும் சுஜித்தின் 5 வயது அண்ணன் புனித் ரோஷன்! கண்கலங்க வைக்கும் காட்சிகள்.!
கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5.45 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் சுஜித் அருகில் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். இதனை அடுத்து சிறுவனை மீட்க கடந்த 80 மணி நேரத்திற்கு மேலாக போராடியும் அணைத்து முயற்சிகளும் தோல்வியை தழுவியது.
இதனை அடுத்து உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டு இன்று அதிகாலை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இந்நிலையில் உடற்கூறு ஆய்வுகள் முடிந்து சுஜித்தின் உடல் பாதிமாபுத்தூர் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்வதற்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஏராளமான பொதுமக்களும், உறவினர்களும் குழந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். குழந்தையின் அருகில் அவனது தந்தை தனது முதல் குழந்தை புனித் ரோஷனை ஏந்தியவாறு செய்வதறியாது நிற்கிறார்.
தனது தம்பி இறந்துவிட்டதை உணர்ந்து அவனது உடலை ஏக்கத்துடன் பார்த்துவருகிறார் சுஜித்தின் அண்ணன் 5 வயதாகும் புனித் ரோஷன். இதனை பார்க்கும் அனைவரது கண்களிலும் கண்ணீர் வருகிறது.