மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சுஜித்தின் உடலை கட்டி அணைத்து கதறி துடிக்கும் தாய்! நெஞ்சை சுக்குநூறாய் உடைக்கும் காட்சிகள்.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5 . 45 மணியளவில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சுஜித் இன்று காலை உடல் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மூன்று நாட்களாக குழந்தையை மீட்க போராடிய அத்தனை முயற்சிகளும் தோல்வியை தழுவியது.
இன்று காலை மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக சுஜித்தின் உடல் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு வடற்கூறு ஆய்வுகள் முடிந்ததும் அடக்கம் செய்வதற்காக மணப்பாறை பாத்திமா புதூர் கல்லறை தோட்டத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்நிலையில் சுஜித்தின் உடலுக்கு உறவினர்கள், பொதுமக்கள் என பலரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திவருகின்றனர். இதனை அடுத்து குழந்தையின் சவப்பெட்டியை கட்டி அணைத்தவாறு சுஜித்தின் தாய் கலாமேரி கதறி அழுதுவருகிறார். தனது குழந்தையின் உடலை விட்டு சற்றும் விலகாமல் அவர் கதறி துடிப்பது கல் நெஞ்சையும் கதற வைக்கும்.