சிறுவன் சுஜித் மீட்புப்பணிக்கு செலவான தொகை எவ்வளவு? பொய்யான தகவலை பகிர்ந்தால் தண்டனை!
திருச்சி மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சுஜித் என்ற சிறுவனை காப்பாற்ற கடும் முயற்சி எடுத்தும் மீட்புப்பணி தோல்வியில் முடிந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுபட்டி என்ற கிராமத்தில் விளையாடி கொண்டிருந்த 2 வயது ஆண் குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். இதனையடுத்து சுஜித்தை மீட்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. குழந்தை சுஜித்தின் உடல் 80 மணி நேரத்திற்கு மேல் மீட்க ப்பட்டது. இதனையடுத்து நேற்று முன்தினம் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் குழந்தை சுஜித்தின் உடலை மீட்க தமிழக அரசு 11 கோடி ரூபாய் செலவு செய்தது என சமூகவலை தளத்தில் ஒரு செய்தி வேகமாக பரவியது. ஆனால் சமூக லைத்தளங்களில் பரவும் செய்தி உண்மையில்லை எனவும், ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித்தை மீட்பதற்கு ரூபாய் 5 லட்சம் செலவானது என திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனின் மீட்பு பணியின் போது 5,000 லிற்றர் டீசல் மட்டுமே செலவானது எனவும், இது குறித்து சமூக வலைத்தளங்களில் தவறான செய்தியை பதிவிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரித்துள்ளார்.