இன்று முதல் உச்சியை பிளக்கப்போகும் வெயில்; அக்னி நட்சத்திரம் ரம்பம்பம்., ஆரம்பம்.!



Summer Season Agni Natchathiram 


கடந்த மார்ச் மாதம் முதலாகவே கோடை வெயிலின் தாக்கம் என்பது கடுமையாக இருந்து வந்த நிலையில், தற்போது மே மாதம் 04ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது. 

கடந்த சில வாரங்களாகவே இந்தியாவின் இயல்பு வெப்பநிலை 40 டிகிரிக்கு மேல் சென்றுவிட்ட நிலையில், அக்னி நட்சத்திரத்தின் தொடக்கம் மக்களின் அச்சத்தை மேலும் அதிகரித்து இருக்கிறது. 

இந்த காலங்களில் கத்திரி வெயில் எனப்படும் சூரிய ஒளியின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால், வெப்பநிலை கூடுதலாக 5 டிகிரி வரை உயரலாம் என அஞ்சப்படுகிறது. 

இதனால் வயதானவர்கள் நண்பகல் வேளைகளில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். இளைஞர்கள், சிறுவர்கள், வெயிலில் வேலை பார்ப்போர் நண்பகல் வேலைகளை தவிர்த்து விட்டு நேரத்தை மாற்றியமைக்க வேண்டும். 

தினமும் கட்டாயம் நீர் குடிப்பது, உடலுக்கு தேவையான மற்றும் குளிர்ச்சியை வழங்கும் பழங்கள், பழச்சாறுகளை தேர்வு செய்து சாப்பிடுவது நல்லது. மண்பானையில் குடிநீரை பருகலாம்.