சூரியனார் கோவிலில் ரூ.100 கோடி மதிப்புள்ள பழமையான சிலைகள் திருட்டு? சர்ச்சையில் சிக்கிய ஆதீனம் பகீர் தகவல்.!



Suriyanarkovil Temple case Updae

தஞ்சாவூர் மாவட்டத்தி உள்ள திருவாடுதுறை, சூரியனார்கோவில் ஆதீனம் பொறுப்பில், 28 வது ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பண்டார சுவாமி செயல்பட்டு வந்தார். 54 வயதாகும் மகாலிங்க சுவாமி, கடந்த அக். 2024ல், பெங்களூரை சேர்ந்த ஹேமாஸ்ரீ என்ற 47 வயது பக்தையை திருமணம் செய்துகொண்டார்.

இதனால் அவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். மேலும், கிராம மக்கள் எதிர்ப்பு கிளம்பியதைத்தொடர்ந்து, அவர் ஆசிரமத்தில் இருந்து வெளியேறினார். ஆதீன பொறுப்புகளை அறநிலையத் துறையிடம் ஒப்படைத்தார்.

இந்நிலையில், திருமணம் தொடர்பான விஷயம் அம்பலமான 4 மாதங்களுக்கு பின்னர், ரூ.100 கோடி அளவிலான சிலைகள் மாயமாகி இருப்பதாக தஞ்சாவூர் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பான புகாரில், திருமலைக்குடி ரத்தினவேல், சூரியனார்கோவில் கிராமத்தின் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முருகன் உட்பட சமூக விரோதிகளின் தூண்டுகளில் என் மீது அவதூறு பரப்பப்பட்டது.

இதையும் படிங்க: 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று கொடுமை.!

பழமையான சிலைகள் மாயம்

கடந்த 500 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியம் கொண்ட சிலை, விக்ரகம், விலையுயர்ந்த மரகதம் போன்றவை திருடப்பட்டுள்ளதாக உள்ளூர் மக்கள் கொடுத்த தகவலின் பேரில் தெரியவருகிறது. என்னை திட்டமிட்டு அவர்கள் வெளியேற்றி இருக்கின்றனர்.

இதனால் தற்போதுள்ள சிலைகளை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். சூரியனார் கோவில் சமூக விரோதிகளால் ஆபத்தை எதிர்கொண்டுள்ளது" என தெரிவித்துள்ளார். மேலும், ரூ.100 கோடி அளவிலான கோவில் சொத்துக்கள், சிலைகள் மாயமாகி இருக்கின்றன எனவும் முன்னாள் ஆதீனம் கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க: #Breaking: பிரபல ரௌடி குறுந்தையன் 2 பேர் கும்பலால் வெட்டிக்கொலை; பழிக்குப்பழியாக பயங்கரம்.. தஞ்சாவூரில் பரபரப்பு.!