சாவில் சந்தேகம்!,, உடலை வாங்க மறுப்பு!,, பஸ் ஸ்டாண்டை முற்றுகையிட்ட உறவினர்களால் பரபரப்பு..!



Suspicious death caused by relatives who besieged the bus stand

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகேயுள்ள தாதம்பட்டி மேட்டு பெருமாள் நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் நவநீதகிருஷ்ணன் (28). இவர் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.  இவரது மனைவி அம்சவல்லி (28). இவர் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காவில் பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 8 ஆண்டுகளு க்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு மோனித் என்ற மகனும் மகிஷா என்ற மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்புகுடிப்பழக்கத்திற்கு அடிமையான நவநீதகிருஷ்ணன் அடிக்கடி குடித்து விட்டு வீட்டிற்கு வந்ததாகவும், அம்சவல்லி அவரை கண்டித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த 22 ஆம்தேதி மாலை வீட்டிற்கு வந்த நவநீதகிருஷ்ணன், குழந்தைகளுடன் அம்சவள்ளியை அழைத்துகொண்டு அருகில் உள்ள மாமியார்  வீட்டில் விட்டுவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

மறுநாள் காலை வீட்டுக்கு வந்த அம்சவல்லி வீட்டின் கதவை தட்டியுள்ளார் நவநீதகிருஷ்ணன் கதவை திறக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக அவசரமாக வேலைக்கு சென்ற அம்சவல்லி, மீண்டும் மாலை வந்து கதவை தட்டிய போதும் திறக்காததால் சந்தேகம் அடைந்தவர் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்துள்ளார். அப்போது நவநீதகிருஷ்ணன் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு இருந்தது தெரிய வந்தது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அம்சவல்லி அலற, அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து நவநீதகிருஷ்ணன் உடலை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த வாடிப்பட்டி காவல்தூறையினர் வழக்கு பதிவு செய்து நவநீத கிருஷ்ணன் உடலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே, நவநீதகிருஷ்ணனின் உறவினர்கள் அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்து வாடிப்பட்டி பேருந்து  நிலையம் முன்பு சாலை மறியல்  செய்தனர். தகவலறிந்த வாடிப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் நித்திய பிரியா தலைமையில் வந்த காவல்துறையினர், மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.