நடிகர் விஷாலுக்கு என்னதான் ஆச்சு? வெளியானது மருத்துவ அறிக்கை.! விபரம் உள்ளே.!
#HBDRiyazKhan: கைபுள்ளையை வெளுத்து வாங்கிய கட்ட துரை ரியாஸ் கானுக்கு இன்று பிறந்தநாள்..! குவியும் வாழ்த்துக்கள்..!
கேரள மாநிலத்தில் உள்ள கொச்சியில் மலையாள திரைப்பட தயாரிப்பாளர் ரஹீத் - ரஷீத் பானு தம்பதிக்கு மகனாக பிறந்தவர் நடிகர் ரியாஸ்கான். இவர் கேரளாவில் பிறந்திருந்தாலும், தனது உயர்கல்வியை சென்னையில் நிறைவு செய்தார். அதனைத் தொடர்ந்து, அமெரிக்காவில் பட்டம் பயின்றார்.
கடந்த 1992 ஆம் ஆண்டு உமா ரியாஸ் கான் என்ற பெண்ணை கரம் பிடித்தார். திரைப்பட தயாரிப்பாளரின் மகனாக இருந்தாலும், திரைப்படங்களின் மீது அதிக ஆர்வம் காட்டாத ரியாஸ் கான் மலையாளத்தில் கடந்த 1994-ல் சுகனம் சுக்கரம் என்ற படத்தின் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகமானார்.
பின் தமிழ் மொழியில் படங்கள் நடிக்க தொடங்கி, வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென தனியொரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியவர். வஜ்ரம் படத்தின் மூலமாக தமிழ் மொழிக்கு அறிமுகம் செய்யப்பட்டு பத்ரி, பாபா, ரமணா, வின்னர், கஜினி, திருப்பதி, போக்கிரி ராஜா உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
இது மட்டுமல்லாது சன் தொலைக்காட்சி ஒளிபரப்பாகும் நந்தினி உட்பட பல சீரியலிலும் அவர் நடித்திருந்தார். இவர் மலையாள மொழி மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, கன்னடா, ஹிந்தி மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் அறிமுகமான ரியாஸ் கான் தமிழில் இன்றுவரை வில்லனாகவே கருதப்படுகிறார். சில குணசித்திர கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்.
இன்று அவருக்கு பிறந்தநாள். அவரின் ரசிகர்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.