மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தமிழக மக்களுக்கு குட் நியூஸ்! தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை! இன்றைய நிலவரம்
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் மற்றும் எண்ணிக்கை குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி தமிழகத்தில் இன்று ஒரு நாளில் புதிதாக 3057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 844 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,03,250 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று மட்டும் 33 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,858 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இன்று ஒரே நாளில் 4262 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனை அடுத்து தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,59,432 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை குறைய தொடங்கியுள்ளது மக்கள் மத்தியில் சற்று நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் சென்னையில் மீண்டும் கொரோனா தொற்று 1000-க்கும் கீழ் பதிவாகி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.