மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தொடர்ந்து குறைந்துவரும் கொரோனா பாதிப்பு.. இன்றைய தமிழக கொரோனா நிலவரம் என்ன தெரியுமா?
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,725 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இன்றைய பாதிப்பு நிலவரம் குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,725 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 59 ஆயிரத்து 916ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த 17 பேர் இன்று கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் ஏற்பட்ட மரண எண்ணிக்கை 11, 495 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 2,384 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,32,656 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை குறைந்து வருவது தமிழக மக்களிடையே சற்று நிம்மதியையும், மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது.