மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தமிழகமே அதிர்ச்சி.. நடக்க இருந்த குழந்தை திருமணம்.. தடுத்து நிறுத்திய அதிகாரிகள்..!
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் திருமணம் நடக்க இருப்பதாக சைல்ட் லைன் அமைப்பிற்கு தகவல் வந்துள்ளது.
இதனையடுத்து தகவலின் பேரில் சிறுமிக்கு திருமணம் நடைபெற இருந்த மண்டபத்திற்கு சென்ற வெம்பாக்கம் வட்டார ஊர்நல அலுவலர் லலிதா சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினார். பின்னர் சிறுமியின் பெற்றோருக்கு அறிவுரைகள் கூறி எச்சரித்து அனுப்பியதோடு மட்டுமல்லாமல் சிறுமியை திருவண்ணாமலை காப்பகத்துக்கு தங்க வைப்பதற்காக அழைத்துச் சென்றனர்.
இதனையடுத்து புகாரின் அடிப்படையில் மணமகன் மற்றும் அவரது பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.