தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம்... அரசு பள்ளிகளில் கிடுகிடுவென உயரம் மாணவர் சேர்க்கை..
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1,6,9 வகுப்புகளில் இதுவரை 5,50,000 மாணவர் சேர்க்கை நடைப்பெற்றுள்ளதாக பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதாவது தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம் அதிகரித்து கொண்டே வருவதால் ஊரடங்கு மற்றும் ஊரடங்கு தளர்வு என மாறி மாறி கொண்டே செல்கிறது. இதனால் மக்களின் பொருளாதாரம் மிகவும் நலிவடைந்து காணப்படுகிறது. எனவே பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அதன்படி கடந்த மார்ச் மாதம் 17 ஆம் தேதி முதல் 1-10 வகுப்பு மாணவர்களின் சேர்க்கையை அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகள் துவங்கியது. இந்நிலையில் தற்போது வரை 5,50,000 மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சேர்ந்து உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.