டிக் டாக் செயலியில் அதிகம் கிண்டல் செய்யப்பட்டவர் நான் தான்!! அதனை தடைசெய்தால் நான் தான் முதல் ஆள்!!



tamilisai talk about tik tok

பொழுதுபோக்கு என்ற பெயரில் இன்றைய இளைய சமுதாயத்தினர் ஒருசில விஷயங்களில் வீணாக நேரத்தை செலவிடுவதோடு பல நேரங்களில் மிகப்பெரிய ஆபத்துகளிலும் சிக்கி கொள்கின்றனர். என்னதான் டெக்னாலஜி வளர்ந்தாலும், அதனுடன் சேர்த்து ஆபத்துகளும் வளர்ந்துகொண்டேதான் இருக்கிறது.

செலஃபீ என்ற பெயரில் ஆபத்தான இடங்களில் புகைப்படம் எடுப்பது, ஓடும் ரயில் முன்பு செலஃபீ எடுப்பது என எத்தனையோ உயிர்கள் பறிபோயுள்ளது. அதேபோல் தற்போது டிக் டாக் என்னும் செயலி இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

tik tok

‘டிக் டாக்’ செயலியில், மாணவ-மாணவிகள் அதிகம் ஈடுபாடு காட்டுகின்றனர். இவற்றை பார்ப்பதற்கு நகைச்சுவையாகவும் ரசிக்கும்படியாகவும் இருந்தாலும், சிலரின் வீடியோக்கள் ஆபாசமாக உள்ளது.

இந்நிலையில் தமிழ் நாட்டில் 'டிக் டாக்' செயலியை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மணிகண்டன் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.

tik tok

இந்நிலையில் இன்று தமிழக பாஜக தலைவர் தமிழிசையிடம், டிக் டாக் செயலிக்கு விரைவில் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு கூறியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த தமிழிசை, டிக் டாக் செயலி தடை வரவேற்கக்கூடிய ஒன்று. ஏனென்றால் அதில் அதிகம் கிண்டல் செய்யப்படக்கூடிய ஆளாக நான் இருக்கிறேன் என கூறினார். மேலும் டிக் டாக் செயலியை தடை செய்தால் அதில் மகிழ்ச்சி அடையக்கூடிய முதல் ஆளாக நான் இருப்பேன் எனவும் கூறினார் .