குட் நியூஸ்... தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களுக்கு விடுமுறை... கொண்டாட்டத்தில் மாணவர்கள்!!



Tamilnadu 5 district leave today

தமிழகத்தில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில், தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக, பல இடங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் நீலகிரி மாவட்டத்தில் மிக அதிக கனமழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு தருமபுரி, சேலம் மாவட்டங்களில் இன்று உள்ளூர் விடுமுறை மற்றும் திருப்பத்தூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

tamil nadu

மேலும், கொல்லிமலையில் வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.