96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
தமிழகத்தில் ராகுல்காந்தி பிரச்சாரம் செய்ய தடை.! தேர்தல் ஆணையத்துக்கு பாஜக தலைவர் அனுப்பிய கடிதம்.!!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பிறகு பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் வரும் 2021 சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது.
இந்தநிலையில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் ராகுல் காந்தி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பரப்புரையில் ஈடுபட்டார். மேலும், பள்ளி-கல்லூரி என்று மாணவர்களிடமும் கலந்துரையாடல் நடத்தினார். இந்நிலையில், ராகுல் காந்தி தமிழகத்தில் பிரசாரம் செய்ய தடை விதிக்க கோரி பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் விதிமுறைகளை மீறியதற்காக ராகுல் காந்தி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவும் கோரிக்கை விடுத்துள்ளார்.