திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பெயிண்ட் தொழிற்சாலை தீ விபத்தில் பரிதாபமாக பறிபோன உயிர்கள்.! தமிழக முதல்வர் இரங்கல்!!
திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் தனியார் பெயிண்ட் தொழிற்சாலையில் மின்கசிவு காரணமாக திடீரென பயங்கர தீ ஏற்பட்டது. இந்நிலையில் தொழிற்சாலையில் வைக்கப்பட்டிருந்த ரசாயனங்கள் வெடித்து சிதறியது. இந்த தீ விபத்தால் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் கிராமத்தில் இயங்கிவரும் சிட்கோ தொழிற்பேட்டையில் அமைந்துள்ள ZEN PAINTS தனியார் நிறுவனத்தில் நேற்று
மாலை 4.00 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீவிபத்தில், நிறுவனத்தில் பணிபுரிந்த சென்னை, அம்பத்தூர், மேனாம்பேடு கிராமத்தைச் சேர்ந்த திருமதி.சுகந்தி (வயது 55) க/பெ பக்தவச்சலம், திருவள்ளூர் வட்டம், கடம்பத்தூர் கிராமம், பெரிய தெருவைச் சேர்ந்த திரு.பார்த்தசாரதி (வயது 51) த/பெ புவனேந்திரன் மற்றும் சென்னை, அம்பத்தூர், விஜயலட்சுமிபுரம், பிரகாசம் தெருவைச் சேர்ந்த திரு.புஷ்கர் (வயது 37) த/பெ கணேசன் ஆகிய மூன்று தொழிலாளர்கள் தீயில் கருகி உயிரிழந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் கிராமம் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். pic.twitter.com/OXgwKzlFAr
— CMOTamilNadu (@CMOTamilnadu) June 1, 2024
இதையும் படிங்க: செல்போனால் நேர்ந்த கொடூரம்.! தம்பினு கூட பார்க்காமல் அண்ணனின் வெறிசெயல்!!
மேலும், இவ்விபத்தின்போது சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த திருவள்ளூர், காந்திபுரம், பெரியகுப்பத்தைச் சேர்ந்த திரு.சீனிவாசன் (வயது 37) த/பெ இருசப்பன் என்பவர் மீது இந்நிறுவனத்தின் சுவர் இடிந்து மேற்கூரை விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான அரசு நிவாரண உதவிகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: குற்றால அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு.! ஆசையாக குளிக்க சென்ற சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்!!