மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சுஜித் வீட்டிற்கு விரைகிறார் தமிழக முதல்வர்: நேரில் சென்று ஆறுதல்!
கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5 . 40 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுஜித் ஆழ்துளை கிணறில் தவறி விழுந்தான். குழந்தை விழுந்ததை அடுத்து கடந்த 80 மணி நேரமாக நடந்த மீட்பு பணிகள் அனைத்தும் தோல்வியை தழுவியது.
இதன் விளைவாக ஆழ்துளை கிணற்றில் இருந்து துர்நாற்றம் வந்ததாகவும், தேசிய பேரிடர் மீட்பு குழுவின் ஆலோசனை படி இடுக்கி போன்ற கருவியை பயன்படுத்தி இன்று அதிகாலை குழந்தையை அழுகிய நிலையில் மீட்டதாகவும் செய்திகள் வெளியானது.
இதனை தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக குழந்தையின் உடல் கொண்டுசெல்லப்பட்டு இன்று காலை அடக்கம் செய்யப்பட்டது. கடந்த 5 நாட்களாக தமிழகமே சுஜித்தின் வருகைக்காக காத்திருந்த நிலையில் சுஜித்தின் மரணம் அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்துவரும் நிலையில் சுஜித்தின் பெற்றோரை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூற திருச்சி நடுகாட்டுப்பட்டியில் உள்ள அவர்கள் வீட்டுற்கு நேரில் செல்கிறார் தமிழக முதல்வர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்.