உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வின் கூட்டணி எப்படி இருக்கும்? முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.



tamilnadu cm talk about CM


தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அ.தி.மு.க.வில் வெற்றிடம் இருப்பதாக கூறி வருகிறார்களே அதுகுறித்து உங்கள் கருத்து என்ன என கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த முதலமைச்சர், சமீபத்தில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெற்றதன் மூலம் அ.தி.மு.க.வில் வெற்றிடம் இல்லை என்று நிரூபித்து விட்டோம் என தெரிவித்தார்.

edapadi palanichami

மேலும், அ.ம.மு.க நிர்வாகிகள் அ.தி.மு.க.வில் இணைய கடிதம் கொடுத்தால் அ.ம.மு.க நிர்வாகிகள் அ.தி.மு.க.வில் இணைவது குறித்து தலைமைக்கழகம் பரிசீலித்து முடிவு செய்யும் என தெரிவித்தார்.

செய்தியாளர்கள் உள்ளாட்சி தேர்தல் குறித்து கேள்விகேட்டனர். அதற்கு பதிலளித்த முதலமைச்சர், உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும். உள்ளாட்சி தேர்தல் நடந்தால் அதில் அ.தி.மு.க.வுக்கு வெற்றிவாய்ப்பு அதிகமாக உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வில் அமைக்கப்பட்ட கூட்டணி, உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும் என தெரிவித்தார்.