மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முதலமைச்சரை தொடர்ந்து தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி!!
தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் முன்னதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் மீண்டும் இன்று அலுவலகத்திற்கு திரும்பி வந்து தனது பணியை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் தற்போது தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவர் விருதுநகரில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும், மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி அவர் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.