#Breaking: 10 மாதங்களில் ரூ.435 கோடி பணம் மோசடி; சைபர் குற்றவாளிகளிடம் பணத்தை இழந்த தமிழக மக்கள்.!
தமிழ்நாடு சைபர் கிரைம் குற்றப்பிரிவு காவல்துறையினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கடந்த 10 மாதங்களில் தமிழகத்தை சேர்ந்த மக்களின் ரூ.435 கோடி பணம் சைபர் குற்றம் காரணமாக மோசடி செய்யப்பட்டுள்ளது.
சைபர் குற்றப்பிரிவு அழைப்பு எண் 1930க்கு கடந்த 10 மாதங்களில் 21760 புகார் அழைப்புகள் பெறப்பட்டுள்ளன. இக்குற்றத்தில் ஈடுபட்ட 332 பேர் கைது செய்யப்பட்டனர்.
மொத்தமாக கடந்த 10 ஆண்டுகளில் 65,476 புகார்கள் பெறப்பட்டுள்ளன. ரூ.435 கோடி பணத்தில் ரூ.335 கோடி பணம் மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
குற்றம் நடந்த 24 மணிநேரத்தில் புகார் அளித்த மக்களின் பணம், எதிராளிகள் வங்கிக்கணக்கை முடக்கி மீட்டு கொடுக்கப்பட்டுள்ளது. சைபர் குற்றத்தில் ஈடுபட்ட சிலர் குண்டரிலும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இக்குற்றங்களில் ஈடுபட குற்றவாளிகள் பயன்படுத்திய 29,530 சிம் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.