மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#BigBreaking: தமிழகத்தில் மஞ்சள், ஆரஞ்சு அலர்ட்.. அடுத்த 4 நாட்களுக்கு உச்சகட்ட எச்சரிக்கை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 11, 12ம் தேதிகளில் சென்னைக்கு மிக கனமழை வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக நாளை முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 9ம் தேதியில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
11 & 12ம் தேதியில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, விழுப்புரம், வேலூர், கடலூர், மயிலாடுதுறை, திருப்பத்தூர், செங்கல்பட்டு, தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல், தேனி, திருச்சி மாவட்டங்களில் மிதமான மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 13ம் தேதியில் விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தஞ்சாவூர் மாவட்டங்களை தவிர்த்து உள்ள மாவட்டங்களில் மிககனமழைக்கு வாய்ப்புகள் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதலால், தமிழ்நாடு அரசு மீட்பு பணிகளை துரித கதியில் மேற்கொள்ள வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.