மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முகக்கவசம் அணியவில்லை என்றால் இனி ரூ.500 அபராதம் - தமிழக மக்களே உஷார்.!
சென்னை மாநகரில் கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க, தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் வசூல் செய்யப்படுகிறது. சுகாதாரத்துறையினர் மற்றும் காவல் துறையினர் சார்பில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளை மேலும் அதிகரித்துள்ள தமிழக அரசு, மக்கள் கூடும் இடங்களில் முகக்கவசம் அணியாமல் செல்லும் மக்களுக்கான அபராத தொகையை ரூ.200 இல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தியுள்ளது. முகக்கவசம் அணிபவர்கள் வாய் மற்றும் மூக்கை மூடி அணிந்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.