மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தமிழகத்தில் வெப்பசலனத்தால் அடித்து நொறுக்கப்போகும் கனமழை.. தனியார் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
டெல்டா மாவட்டங்கள், வட மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் வானிலை ஆய்வு மைய அதிகாரி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வெப்பச்சலனத்தின் காரணமாக தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்டா மாவட்டங்கள், வட மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை மழை பெய்யும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், சேலம், ஈரோடு மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 21 மாவட்டங்களில் கனமழை பெய்யும், ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
வடமாவட்டங்களை போல தென்மாவட்டத்திலும் கனமழை பெய்யும். தென்மாவட்டத்தில் வரும் 2 நாட்களுக்கு திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் கனமழை பெய்யும். கோயம்புத்தூர், நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டத்தில் மிதமான மழை பெய்யும். தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில், புளியங்குடி, சிவகிரி, வாசுதேவநல்லூர், திருவேங்கடம் நகர்களில் கனமழை பெய்யலாம். அதனைப்போல, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி, எட்டயபுரம், கழுகுமலை, புதூர், ஓட்டப்பிடாரம், பசுவந்தனை மற்றும் கயத்தாறு, கடம்பூர் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.