பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
கஜா புயல் அப்டேட்: தமிழக உள்மாவட்டங்களில் நாளை காலை முதல் கனமழை பெய்யும்! தமிழ்நாடு வெதெர்மேன் ரிப்போர்ட்
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள கஜா புயல் தீவிர புயலாக மாறியுள்ளது. காலை 8.30 மணிக்கு கஜா புயல் தீவிர புயலாக மாறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புயலால் பாதிக்கப்படக் கூடிய வாய்ப்பு உள்ளதாக கருதப்படும் கடலூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், திருவாரூர், புதுக்கோட்டை, மற்றும் தஞ்சாவூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று எதிர்பார்த்தது போல் அந்த மாவட்டங்களில் மழை பெய்யவில்லை.
மாறாக சென்னையில் மட்டும் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு வெதெர்மேன் தனது பேஷ்புக் பக்கத்தில் உள்மாவட்டங்களில் நாளை 16 ஆம் தேதி காலை முதல் மழை பேயும் என்று அறிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது,
"கஜா புயலால் சென்னை முதலில் மழையைப் பெற்றுள்ளது. கஜா புயல் கடற்கரையை நெருங்கும்போது, மற்ற மாவட்டங்களிலும் மழை பெய்யும். உள்மாவட்டங்களான மதுரை, திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் நாளை காலையில் இருந்து மழை பெய்யத் தொடங்கும். நாகை-வேதாரண்யம் இடையே இன்று நள்ளிரவு புயல் கரையைக் கடந்தபின் உள்மாவட்டங்களில் மழை இருக்கும்.
கஜா புயல் தீவிரமடையும்போது, மேகக்கூட்டங்களை மிகநெருக்கமாக வைத்துக்கொள்ள முயற்சிக்கும். எப்படியாகினும், புல்-எஃபெட் மூலம், சென்னைக்கு அவ்வப்போது 16, 17-ம் தேதிவரை இடைவெளிவிட்டு மழை பெய்யும். மீண்டும் சொல்கிறேன், இது சென்னைக்கான புயல் அல்ல, ஒருபோதும் அவ்வாறு வரவில்லை. நமக்கு இப்போது கிடைக்கும் மழை போனஸ் போன்றது, அடுத்த 3 நாட்களில் நமக்கானது கிடைக்கும்." என கூறியுள்ளார்.