முதலமைச்சர் சார் நீங்க வேற லெவல்.! கொஞ்சம் கூட விளம்பரம் இல்லை.! முதல்வர் மு.க.ஸ்டாலினை பாராட்டும் தமிழக மக்கள்.!



tamilnadu people appreciate mk stalin

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக வெளியிடப்பட்ட தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. இதனையடுத்து தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றவுடன் மு.க ஸ்டாலின் பல முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். முதலாவதாக கொரோனா நிவாரணமாக குடும்பத்துக்கு ரூ.4000 நிதியுதவி, ஆவின் பால்விலை லிட்டருக்கு ரூ3 குறைப்பு உள்ளிட்ட கோப்புகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்.

இதனையடுத்து அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு முக்கிய இடம் பெற்றிருந்தது. இந்த நிவாரண நிதி ரூ.4 ஆயிரத்தில் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் இந்த மாதம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார்.

MK Stalinஇந்தநிலையில், வருகிற 15-ந்தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ரேசன் கடைகளிலும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதற்காக டோக்கன் வழங்கும் பணியும் வீடு வீடாக தொடங்க இருக்கிறது. ரேசன் கடை பணியாளர்களே டோக்கன் வழங்கி வருகின்றனர். கொடுக்கப்படும் டோக்கன்களில் கட்சியின் சின்னமோ, கட்சி பெயரோ, முதலமைச்சரின் பெயரோ, முதலமைச்சரின் புகைப்படமோ இல்லை. தற்போது வழங்கப்பட்டு வரும் டோக்கனில், ரேசன் கடையின் எண், பெயர், அட்டைதாரர் பெயர், கிராமம், தெரு, நிவாரண நிதி வழங்கும் தேதி, நேரம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. இறுதியில், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் பலரும் முதல்வரை பாராட்டி வருகின்றனர்.