குண்டு வீசுனவங்க நாங்க இல்லை; எங்களின் வரலாறு வேறு - PFI தமிழ்நாடு மாநில தலைவர் பரபரப்பு பேட்டி.!



Tamilnadu PFI Leader Pressmeet

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மிரட்டல் தோனியில் பேசி வருகிறார். பாப்புலர் பிராண்ட் இயக்க வரலாற்றில் எப்போதும் இந்த மாதிரியான சம்பவம் நடந்தது இல்லை என PFI மாநில தலைவர் பேசினார்.

பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா தமிழ்நாடு மாநில தலைவர் முகம்மது ஷேக் அன்சாரி அளித்துள்ள பேட்டியில், "நாங்க ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்தி வருகிறோம். எங்களுக்கு ஆதரவு தருபவர்களும் ஜனநாயக ரீதியில் ஆதரவு தருகிறார்கள். சிலர் ஆங்காங்கே சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதை பாப்புலர் பிராண்ட் அமைப்பினர் செய்வதாக புகார் கூறுகிறார்கள். 

பெட்ரோல் குண்டு வீசியவர்களுக்கும், எங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. நாங்கள் அசம்பாவித நிகழ்வுக்கு பின்புலமாக இருந்தது இல்லை. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மிரட்டல் தோனியில் பேசி வருகிறார். இது ஜனநாயக விரோத பேச்சு. இதனை பாப்புலர் பிராண்ட் கண்டிக்கிறது. 

பாப்புலர் பிராண்ட் இயக்க வரலாற்றில் எப்போதும் இந்த மாதிரியான சம்பவம் நடந்தது இல்லை. எங்களின் மீது குற்றசாட்டை வைக்கும் பாஜக தலைவர்கள் அவர்களின் வரலாற்றை யோசிக்க வேண்டும். நீங்கலே உங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு இவ்வாறான செயலை செய்துள்ளீர்கள். பாஜக பிரமுகர்கள் அவர்களின் வீட்டில் சுயமாக பெட்ரோல் குண்டுவீசி இருக்கின்றனர்" என்று தெரிவித்தார்.