முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட அபராதம் தொகை எவ்வுளவு தெரியுமா?..!
சென்னையில் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து, கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றிவருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரமாக முகக்கவசம் அணியாமல் வந்த 18 ஆயிரத்து 819 பேரிடம் ரூ.1 கோடியே 15 இலட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
இந்த விஷயம் குறித்து காவல் அதிகாரி தெரிவிக்கையில், "மாநில அரசின் உத்தரவின் பேரில் முகக்கவசம் அணியாத நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வெளியே வர வேண்டும். கடந்த 7 ஆம் தேதி முகக்கவசம் அணியாமல் இருந்த 7616 பேரிடம் இருந்து ரூ.15 இலட்சத்து 23 ஆயிரத்து 20 ஆயிரம் அபராதம் மொத்தமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
இதனைப்போல, 8 ஆம் தேதி 5871 பேரிடம் இருந்து ரூ.11 இலட்சத்து 94 ஆயிரம், 9 ஆம் தேதி 3174 பேரிடம் இருந்து ரூ.6 இலட்சத்து 34 ஆயிரம், 10 ஆம் தேதி 5113 பேரிடம் இருந்து ரூ.10 இலட்சத்து 22 ஆயிரம், 11 ஆம் தேதி 5195 பேரிடம் இருந்து ரூ.11 இலட்சத்து 94 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையான நேற்று மட்டும் முகக்கவசம் அணியாமல் வந்த 4962 பேரிடம் இருந்து ரூ.9 இலட்சத்து 92 ஆயிரத்து 400 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை ரூ.200 மட்டுமே அபராதம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், பொங்கலுக்கு பின்னர் ரூ.500 அபராதம் வசூல் செய்யப்படும்" என்று தெரிவித்தார்.