திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#AudioLeaked: பெண் காவலரிடம் ஆபாசமாக பேசி வழிந்த காவல் உதவி ஆய்வாளர்.. அதிர்ச்சி தரும் ஆடியோ வைரல்..!
பெண்கள் தங்களின் சிறுவயதில் இருந்து பாலியல் தொல்லையை சந்தித்து வருகின்றனர். பணியிடத்திலும், கல்வி நிறுவனத்திலும் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு அளவில்லாமல் போய்விட்டது. தீங்கான எண்ணம் கொண்ட பலரும் பெண்களை தங்களின் ஆதிக்கத்திற்கு இணங்க வைத்து கொடுமை செய்கின்றனர். இந்நிலையில், காவல் துறை அதிகாரியின் ஆடியோ வைரலாகியுள்ளது.
அந்த ஆடியோவில், "நான் வருகிறேன். உன் வீட்டிற்கு 10 நிமிடம் வந்துவிட்டு செல்கிறேன். கட்டிதான் பிடிப்பேன். என்ஜாய் செய்ய மாட்டேன். நான் எவ்வுளவு ஆசையாக கேட்கிறேன். எதற்கு வேண்டாம் என சொல்கிறாய்?. 1 மணிக்கு வந்தால், அரைமணிநேரம் போதும். கதவை மட்டும் திறந்து வைத்திடு" என்று காவல் உதவி ஆய்வாளர் கூறுகிறார்.
"என் வீட்டில் நான் இருக்கிறேன். போனிலேயே சொல்லுங்கள். இல்லை சார் வேண்டாம். தவறாக நினைத்துக்கொள்ள வேண்டாம். தவறாக என்னிடம் பேச வேண்டாம். நான் யாரிடமும் எதையும் கூறமாட்டேன். எனக்கு பயமாக உள்ளது. நான் சிறிது நேரம் கழித்து அழைக்கிறேன்" என்று பெண் காவலர் உதவி ஆய்வாளரின் ஆபாச பேச்சுக்களை தவிர்த்து வருகிறார்.