கத்திரி வெயில் 25 நாட்கள்.. மக்களே கவனம்.. கொளுத்தப்போகும் வெயில்.. அனல் காற்று, புழுக்கம்.!



Tamilnadu Summer Season

தமிழ்நாட்டில் கோடை தொடங்குவதற்கு முன்னதாகவே வெயில் கொளுத்தி வரும் நிலையில், கடந்த மாதம் முதலாகவே வெயிலின் தாக்கம் பல்வேறு இடங்களில் 100 டிகிரியை தாண்டியது. வேலூரில் அதிகபட்சமாக 103.3 டிகிரி, ஈரோட்டில் 103.2 டிகிரி பதிவானது. திருத்தணியில் 102 டிகிரி பதிவாகியது. 

தலைநகர் சென்னையிலும் வெயில் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், மே மாதம் 4 ஆம் தேதி முதல் மே 28 ஆம் தேதி வரை கத்தரி வெயில் தொடங்குகிறது. இதனால் 25 நாட்களுக்கும் மேல் அக்னி வெயில் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காலத்தில் வெயிலின் தாக்கம் கடுமையான அளவு இருக்கும். 

tamilnadu

பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரியையும் கடந்து வெயில் இருப்பதால், கோடையில் இது 110 டிகிரியை தாண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பகலில் அனல் காற்றும், இரவுகளில் புழுக்கமும் அதிகரிக்கும். கத்திரி வெயில் நாட்களில் பகல் வேளையில் வெளியே செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், உடலுக்கு குளிர்ச்சி தரும் இளநீர், மோர், தர்பூசணி, பழச்சாறுகள், கூழ் போன்றவற்றை பருகலாம்.