அச்சச்சோ.. தமிழகம் முழுவதும் பேராபத்து.. கோடை வெயில் தாக்கத்தால் பரவுகிறது அடுத்த நோய்.!



Tamilnadu Summer Season Eye Disease 

 

கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் அது சார்ந்த பிரச்சனைகளை அனுபவிக்க தொடங்கி இருக்கின்றனர். 

கடந்த சில வாரங்களாக பலருக்கும் திடீர் அம்மை போன்ற பிரச்சனை ஏற்பட்டதாக தெரியவந்தது. இந்நிலையில் கோடை வெப்பம் காரணமாக கண் சார்ந்த அலர்ஜி பிரச்சனை ஏற்பட தொடங்கியுள்ளது. 

இளம் சிவந்த கண்கள் நோய் என்று அழைக்கப்படும் கண்கள் அலர்ஜி, சூரியனின் புறஊதா கதிர்கள் பாதிப்பு காரணமாக மக்களுக்கு ஏற்படுகிறது. இப்பிரச்சனையில் இருந்து தப்பிக்க மக்கள் இயற்கையான பழச்சாறுகளை அதிகம் அருந்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

வெள்ளரி, தர்பூசணி, இளநீர், மோர், பழைய கஞ்சி நீர் உட்பட உடலுக்கு குளிர்ச்சியை தரும் பழங்கள் மற்றும் பழச்சாறுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.