திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சென்னையை தாக்கும் அடுத்த புயல்? தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்த விளக்கம்.!
கடந்த டிசம்பர் 4ம் தேதி உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் அதி மிக கனமழை கொட்டி தீர்த்தது. அதன் காரணமாக சென்னை முழுவதும் வெள்ளைகாடாக காட்சியளித்தது.
தற்போது வரை சென்னையின் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இந்த நிலையில் அடுத்த வாரம் சென்னைக்கு புதிய புயல் வர வாய்ப்புள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இது குறித்து விளக்கமளித்த தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், அது முழுக்க வதந்தி தான் அதனை யாரும் நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார். சென்னையை நோக்கி புதிய புயல் உருவாகியுள்ளதாக உலா வரும் செய்தி அடிப்படையற்றது என தெரிவித்துள்ளார்.
ஆனால் அதே நேரத்தில் அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை வரும் டிசம்பர் 10ஆம் தேதி உருவாகி இந்திய கடல் பகுதியை நோக்கி வரலாம். இதனால் சென்னைக்கு எந்தவிதமான பாதிப்பு ஏற்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.