மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மதுபிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் மூன்று நாட்கள் டாஸ்மாக் மூடல்.! எப்போழுது தெரியுமா??
இந்தியாவில் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி முதல் 7 கட்டங்களாக ஜூன் 1ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் முதற்கட்டமாக தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. தொடர்ந்து ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, பணிகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் மக்களவை தேர்தலையொட்டி ஏப்ரல் 17-ஆம் தேதி முதல் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 19-ஆம் தேதி வரை மதுபான கடைகள் இயங்க கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதாவது ஏப்ரல் 17ஆம் தேதி மாலை 6 மணி முதல் தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 19ஆம் தேதி மாலை 6 மணி வரை மதுக்கடைகள் மூடப்பட வேண்டும். அதேபோல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4ஆம் தேதியும் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.