திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஆசை வார்த்தை கூறி மாணவியை சீரழித்த இளைஞர்.. ஆறுதல் கூறுவதாக ஆசிரியர் செய்த கொடூரம்!
பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் மற்றும் ஆசிரியரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை சேர்ந்த 12 வயது சிறுமி 7ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த சிறுமியை, அதே பகுதியை சேர்ந்த 22 வயதான அபிமணி என்ற இளைஞர் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனை பள்ளியில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர் சகாயராஜ் என்பவரிடம் மாணவி கூறி அழுதுள்ளார். இதனை பயன்படுத்திக் கொண்ட ஆசிரியர் பள்ளி மாணவிக்கு ஆறுதல் கூறுவது போல தனது வீட்டிற்கு அழைத்து சென்று பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனால் மாணவி மிகவும் சோர்வாக காணப்பட்டதால், மனைவியின் பெற்றோர் இதுகுறித்து விசாரித்துள்ளனர். அப்போது தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து கதறி அழுதுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளனர்.
ஆனால், இது குறித்து எந்த எந்த நடவடிக்கையும் எடுக்காததால், ஆத்திரமடைந்த மனைவியின் பெற்றோர் குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்பிற்கு புகார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் வந்து விசாரணை செய்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் அபிமணி மற்றும் உடற்கல்வி ஆசிரியர் சகாயராஜ் ஆகியோரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.