மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எல்கேஜி சிறுமியை கூட விட்டு வைக்காத காமக்கொடூர ஆசிரியர்கள்!
செங்கல்பட்டு அருகே எல்கேஜி படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 ஆசிரியர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வல்லாஞ்சேரியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் எல்கேஜி படிக்கும் சிறுமிக்கு ஆசிரியர்கள் 2 பேர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர்.
அதன்படி, சிறுமிக்கு விளையாட்டு சொல்லி தருவதாக மூடிய அறைக்குள் சென்று, ஆசிரியர்கள் ராசையா மற்றும் காயேஷ்குமார் இருவரும் பாலியல் ரீதியாக சிறுமியை துன்புறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து பெற்றோர் போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து பெற்றோர்கள் பள்ளியின் முன்பு போராட்டம் நடத்தியதையடுத்து ஆசிரியர்கள் இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு கைது செய்துள்ளனர்.