#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பள்ளி சிறுமியிடம் அந்த வீடியோவை காட்டி அத்துமீறிய ஆசிரியர்.. போலீசார் அதிரடி நடவடிக்கை!
கோவை அருகே பள்ளி மாணவியிடம் ஆபாச வீடியோவை காட்டி அத்துமீறிய ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிவன்புரம் பகுதியை சேர்ந்தவர் ஆசிரியர் பிராங்கிளின். இவர் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 20ஆம் தேதி அதே பள்ளியில் படிக்கும் ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம், தனது செல்போனில் ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களை காட்டி அத்துமீற முயற்சித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் பிராங்கிளின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனிடையே தலைமை ஆசிரியர் பிராங்க்ளினை பணியிடை நீக்கம் செய்து பள்ளி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தலைமை ஆசிரியரே பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.