மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
11ம் வகுப்பு மாணவனை காதலித்து கடத்தி சென்ற ஆசிரியை கைது.!
சென்னை கேளம்பாக்கம் பொன்மார் கிராமத்தில் வசித்து வந்த பதினோராம் வகுப்பு மாணவன் சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்துள்ளான். கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்குச் சென்ற மாணவன் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து மாணவனின் பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதனையடுத்து உடனடியாக போலீசில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாணவனை தீவிரமாக தேடி வந்தனர். அப்போது பள்ளியில் ஆங்கில ஆசிரியயைக்கும், மாணவனுக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது.
மேலும் அந்த ஆசிரியை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வேலையை விட்டு சென்று விட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து மாணவனை காதலிப்பதாக கூறி கடத்தி சென்றுள்ளார். இதனை அடுத்து மாணவனும், ஆசிரியையும் கோயம்புத்தூரில் இருப்பது தெரியவந்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஆசிரியையை பிடித்து விசாரணை செய்ததில், மாணவன் தன்னை விடாமல் தேடி வந்து தற்கொலை செய்து கொள்வேன் என கூறியதால் அவனை தன்னுடன் அழைத்து சென்றதாக கூறியுள்ளார். இந்த சம்பவத்தில் ஆசிரியை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் கைது செய்துள்ளனர்.