மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
யாரும் மிஸ் பண்ணிடாதீங்க... தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.!
தற்காலிக ஆசிரியர்கள் பணிக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்றும், சரிபார்க்கப்பட்ட விண்ணப்பங்களை இரவு 8 மணிக்குள் கல்வித்துறை ஆணையருக்கு அனுப்ப வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 13,000 தற்காலிக ஆசிரியர் பணிகளில் சேர தகுதி வாய்ந்தோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் என்று 3 வகையான ஆசிரியர்களை நியமனம் செய்ய அறிவுறுத்தப்பட்டது.
அவ்வாறு பணியில் அமர்த்தப்படும் தற்காலிக ஆசிரியர்களில், இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.7,500 ஊதியமாகவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.10 ஆயிரம் ஊதியமாகவும், முதுகலை ஆசிரியர்களுக்கு ரூ.12 ஆயிரம் ஊதியம் என்ற அடிப்படையில் பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கான விண்ணப்பங்கள் கடந்த ஜூலை 4ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், விண்ணப்பிப்பதற்கு இன்றே கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாலை 5 மணி வரை தற்காலிக ஆசிரியர் பணிக்கு தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும். சரிபார்க்கப்பட்ட விண்ணப்பங்களை இன்று இரவு 8 மணிக்குள் கல்வி ஆணையருக்கு அனுப்ப வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரப்பட்டுள்ளது.