மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருமணமான ஒரே மாதத்தில் புதுமணப்பெண் தற்கொலை.. கண்ணீரில் பெற்றோர்கள்..!
தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம், அண்ணா நகரில் வசித்து வருபவர் கணேசன். இவரின் மகள் தனுசியா (வயது 20). கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில், வாத்தியார்விளை கிராமத்தை சேர்ந்தவர் செல்வமூர்த்தி (வயது 34). தனுஷியாவிற்கும் - செல்வமூர்த்திக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
திருமணத்தின் போது வரதட்சணையாக செல்வமூர்த்திக்கு 10 கிராம் அளவுள்ள செயின், 2 கிராம் அளவுள்ள மோதிரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், தனுஷியாவிற்கு 2 கிராம் கம்மல் தங்க நகைகள் போன்றவை வழங்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கு பின்னர் தம்பதிகள் நாகர்கோவிலில் உள்ள செல்வமூர்த்தியின் வீட்டில் தங்கியிருந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை தம்பதிகள் மாமியார் வீட்டில் இருந்த நிலையில், மதிய வேளையில் கோழி இறைச்சி சமைக்கப்பட்டுள்ளது. அப்போது, தனுஷியா திடீரென தனது அறைக்கு சென்றுவிட்ட நிலையில், மீண்டும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த செல்வமூர்த்தி அறைக்குள் சென்று பார்த்தபோது, தனுஷியா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது.
இந்த விஷயம் தொடர்பாக வடசேரி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், தனுஷியாவின் பெற்றோருக்கும் விஷயம் கூறப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த வடசேரி காவல் துறையினர் தனுஷியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தம்பதிகள் இருவருக்கும் 14 வயது வித்தியாசம் உள்ள நிலையில், திருமணத்திற்கு பின்னர் பெற்றோரிடம் பேசிய தனுஷியா தனக்கு மன உளைச்சலாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் தனுஷியாவின் மரணத்தில் மர்மம் உள்ள நிலையில், அவரின் தற்கொலைக்கான காரணம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.