ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
17 வயது மாணவிக்கு செல்போன் மூலம் பாலியல் தொல்லை.... கல்லூரி முதல்வரை போக்சோவில் கைது.!
தென்காசியில் தனியார் பாராமெடிக்கல் கல்லூரியில் பயின்று வந்த 17 வயது சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் கொடுத்து வந்த கல்லூரி முதல்வர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அங்கு அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
தென்காசியில் தனியார் பாரா மெடிக்கல் கல்லூரி நடத்தி வருபவர் முகமது அன்சாரி. 55 வயதான இவர் கல்லூரியின் முதல்வராகவும் இருந்து வந்திருக்கிறார். இந்நிலையில் தனது கல்லூரியில் படிக்கும் 17 வயது மாணவி ஒருவருக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
அந்த மாணவியின் செல்போன் இருக்கு தினமும் அழைத்து அவருடன் பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்கும் வகையில் பேசி வந்திருக்கிறார். இது தொடர்பாக அந்த மாணவி பலமுறை அவரைக் கண்டித்தும் இதனைத் தொடர்ந்து வந்திருக்கிறார் முகமது அன்சாரி.
இதனால் தொடர் தொல்லை மற்றும் மன அழுத்தத்திற்கு ஆளான அந்த மாணவி இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் விசாரணை செய்த காவல்துறையினர் கல்லூரி முதல்வர் முகமது அன்சாரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.