மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாகன தணிக்கையில் ஈடுபட்ட காவலர் கார் ஏறி இறங்கி அகால மரணம்; நெஞ்சை பதைபதைக்க வைக்கும் CCTV காட்சிகள் வெளியீடு.!
தென்காசி மாவட்டத்தில் உள்ள சொக்கம்பட்டி - புளியங்குடி சாலையில் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த இன்னோவா கார் சாலையில் நின்றுகொண்டு இருந்தவர்கள் மீது மோதியது.
மேலும், நிகழ்விடத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்த காவல் உதவி ஆய்வாளரின் மீது மோதி ஏறி இறங்கியுள்ளது. இந்த விபத்தில் காவல் உதவி ஆய்வாளர் சுந்தரய்யா, காவலர் மருதுபாண்டி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இருவரும் மீட்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டனர். இதில், காவல் உதவி ஆய்வாளர் சுந்தரய்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். அவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து குறித்த சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளன.