மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அதிகனமழையால் தென்காசி சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்.. புரட்டியெடுத்த மழை.!
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் அநேக இடங்களில் நேற்று கனமழை பெய்தது. தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உட்பட சில மாவட்டங்களில் அதிக கனமழையும் பெய்தது.
இந்நிலையில், நேற்று மாலை 4 மணியளவில் தொடங்கிய கனமழையானது, தென்காசியில் இரவு 10 மணி வரை தொடர்ந்தது.
தென்காசி நகரில் உள்ள இரயில்வே மேம்பாலம் பெட்ரோல் பங்க் அருகில் நீர் வெள்ளம் போல சாலைகளை சூழ்ந்து கொண்டது. இதனால் வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தை இயக்க முடியாமல் சிரமம் அடைந்த நிலையில், இது குறித்த வீடியோவும் வெளியாகி உள்ளது.
சம்பந்தப்பட்ட இடத்திற்கு பின்னால் சீவலப்பேரி குளம் இருப்பதால், அந்த நீர் விரைந்து வடிந்து சென்றுவிடும் எனினும், அதிக கனமழை காரணமாகவே சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.