53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
ஆசிரியருக்கு ஆதரவாக மாணவிகளை ஆபாசமாக வசைபாடிய மாணவர்கள்; ஆசிரியர் மீது போக்ஸோ பாய்ந்தது.! தென்காசியில் அதிர்ச்சி.!
ஆசிரியர் தரப்பில் பேசுவதாக எண்ணி மாணவர்கள் சக மாணவிகள் குறித்து ஆபாசமாக பேசிய சம்பவத்தால், உயிரியல் ஆசிரியர் போக்ஸோ வழக்கில் சிக்கிய சம்பவம் நடந்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை, மீனாட்சிபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில், 17 வயதுடைய சிறுமி 11ம் வகுப்பு படித்து வருகிறார்.
இப்பள்ளியில் உயிரியல் ஆசிரியராக ஜெயராஜ் என்பவர் வேலைபார்த்து வருகிறார். இவர் இரட்டை அர்த்தத்தில் மாணவிகளிடம் பேசி வந்ததாக தெரியவருகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் பெற்றோரிடம் முறையிட, அவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற பள்ளி நிர்வாகத்தினர், ஜெயராஜை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டனர்.
இதனிடையே, சில மாணவர்கள் தங்களுக்கு ஆசிரியர் ஜெயராஜே வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர். அவர்களிடம் பள்ளி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து அனுப்பி வைத்தது.
இதனை ஏற்றுக்கொள்ளாத மாணவர்கள் சமூக வலைத்தளத்தில் குழுவை உருவாக்கி, மாணவிகள் குறித்து அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசி இருக்கிறது. இந்த விஷயம் தொடர்பாக தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புகாரை ஏற்ற காவல் துறையினர் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.